திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்து வந்த நிலையில், அவரைக் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே ஆளும் தவெக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வார் என்று குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பி அரசாங்கம் தப்பித்துவிடலாம் என நினைத்தால் அது பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.