அன்பில் மகேஷ் கைது ஏன்? - காவல்துறை விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேஷ் கைது ஏன்? - காவல்துறை விளக்கம்

அன்பில் மகேஷ் கைது ஏன்? - காவல்துறை விளக்கம்

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசின் அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பி.டி. அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திகா, அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். திருச்சி, சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகளின்போது ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் அடிப்படையிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அமைந்தகரையில் கைது இதனிடையே, அக்டோபர் 26, 2026 அன்று சென்னை அமைந்தகரையில் வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் ஆணையரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.