அன்பில் மகேசை சந்திக்க புழல் மத்திய சிறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
27 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேசை சந்திக்க புழல் மத்திய சிறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின்

அன்பில் மகேசை சந்திக்க புழல் மத்திய சிறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின்

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவருடன் சேகர்பாபுவும் சிறைக்கு வந்தார். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் தி.மு.க. பிரமுகருமான பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் மற்றும் அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ் (39), சுரேஷ் (49) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. பிரமுகருமான முத்துகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். அன்பில் மகேஸ் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, முன்ஜாமீன் கோரியும் தனியாக மனு அளித்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், முன்ஜாமீன் வழங்க மறுத்து நேற்று மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், நேற்று மாலை அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் நான்கு மணி நேர விசாரணைக்குப் பிறகு, இரவு 8 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, இரவு 10 மணியளவில் சென்னை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நள்ளிரவில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சூழலில், சிறையில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியைச் சந்திப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் புழல் மத்திய சிறைக்கு வருகை தந்தார். அவருடன் சேகர்பாபுவும் வந்திருந்தார்.