அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் உள்ளிட்ட நற்பண்புகளையும் சமூக அக்கறையையும் வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மாணவர்களிடம் அறிவை வளர்த்து, ஒழுக்கத்தைப் போதித்து, அவர்கள் வெற்றிபெறும் வகையில் அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் ஆசிரியர்களின் கல்விப் பணி தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.