அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை: டி.ஜி.சி.ஏ. உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

11 Sep 2026 www.thinathulir.com

அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை: டி.ஜி.சி.ஏ. உத்தரவு

அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை: டி.ஜி.சி.ஏ. உத்தரவு

ஏர் இந்தியா விமானி ஒருவர் விமானப் பயணத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த விவகாரம் விமானப் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அந்த சம்பவத்தின்போது, விமானம் நடுவானில் சுமார் 300 அடி உயரம் திடீரெனக் குறைந்தது. பின்னர் விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானி பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், விமானப் பயணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நாட்டில் செயல்படும் அனைத்து விமான நிறுவனங்களிலும் பணியாற்றும் விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்த விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. இந்த பரிசோதனை நடைமுறையை 2027-ம் ஆண்டு ஜூலைக்குள்நிறைவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு கூறுகையில், போதைப்பொருள் பரிசோதனைக்கான புதிய விதிமுறைகளின் வரைவு இந்த மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். தற்போது விமானிகளில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே சீரற்ற முறையில் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிய நடைமுறையின் மூலம், இந்திய விமானங்களில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து விமானிகளுக்கும்இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளுக்கும் பரிசோதனையை விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விமானி ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.