“அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில்; யாரும் ஓடிவிடக்கூடாது” – சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

03 Sep 2026 www.thinathulir.com

“அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில்; யாரும் ஓடிவிடக்கூடாது” – சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

“அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில்; யாரும் ஓடிவிடக்கூடாது” – சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதுவரை 43 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.சட்டம்-ஒழுங்கு தொடர்பான துறை என்பதால், இந்த விவாதம் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், அதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.ஆனால், உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் உடனடியாக பதில் அளிக்கவில்லை. அமைச்சர்களே பதிலளித்து வந்தனர். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.இந்த நிலையில், எதிர்பாராத விதமாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எழுந்து பேசினார். அப்போது, அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாக தெரிவித்த அவர், தான் அவையில் இல்லாவிட்டாலும் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் அறிந்திருப்பதாக கூறினார்.மேலும், “பதிலளிக்கும் நேரத்தில் யாரும் எழுந்து வெளியேறிவிடக்கூடாது” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதன் பின்னர் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் இருந்து வெளியேறினார். அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் பதிலளித்தனர்.