ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கைப் பயணத்தில் அறிவை வழங்கி, இலக்குகளை நோக்கி முன்னேற வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, நாட்டில் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், கல்வியின் அவசியத்தையும் போற்றும் நாளாக இது விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பாட அறிவை வழங்குவதோடு மட்டுமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் வழிகளையும் கற்றுக்கொடுத்து, அறிவை வளர்த்து, நம்பிக்கையை ஏற்படுத்தி, எதிர்கால தலைமுறைகளை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.