அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை, இன்று சென்னையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் கவனம் திரும்பியுள்ளது. கடந்த 1-ந்தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2-ந்தேதி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200 ஆகவும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.12,775 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், 3-ந்தேதி சவரனுக்கு மேலும் ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.12,800-க்கும் விற்பனையானது. இதையடுத்து, நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800 ஆகவும், கிராமுக்கு ரூ.275 அதிகரித்து ரூ.13,100 ஆகவும் இருந்தது. நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080 ஆகவும், கிராமுக்கு ரூ.285 அதிகரித்து ரூ.13,385 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,960 சரிந்து ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.245 குறைந்து ரூ.13,140 ஆக உள்ளது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 சரிந்து ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.