அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென சரிவை சந்தித்துள்ளது.முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.