அதிரடி ஆட்டத்துக்கு கிடைத்த பரிசு... டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் சர்மா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
28 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அதிரடி ஆட்டத்துக்கு கிடைத்த பரிசு... டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் சர்மா

அதிரடி ஆட்டத்துக்கு கிடைத்த பரிசு... டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் சர்மா

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, ஐசிசி ஆண்கள் டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், 199 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தை அளித்தார். வெறும் 35 பந்துகளில் சதம் அடித்த அவர், மொத்தம் 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடங்கும். அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றது. இந்தச் சிறப்பான ஆட்டத்தின் எதிரொலியாக, ஐசிசி ஆண்கள் டி20 பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா 897 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா பர்ஹான் 883 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் இஷான் கிஷன் 866 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். சஞ்சு சாம்சன் ஆறு இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை அடைந்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அர்ஷ்தீப் சிங் ஆறு இடங்கள் உயர்ந்து 15-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அக்சர் படேல் 11-வது இடத்தில் உள்ளார். இருப்பினும், டி20 பந்துவீச்சாளர்களுக்கான தற்போதைய முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.