அடுத்த இன்னிங்ஸை தொடங்கலாமா?” – தி.மு.க. இளைஞர் அணியின் 47வது ஆண்டை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பதிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Jul 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Jul 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அடுத்த இன்னிங்ஸை தொடங்கலாமா?” – தி.மு.க. இளைஞர் அணியின் 47வது ஆண்டை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பதிவு

அடுத்த இன்னிங்ஸை தொடங்கலாமா?” – தி.மு.க. இளைஞர் அணியின் 47வது ஆண்டை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பதிவு

தி.மு.க.வின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான இளைஞர் அணி, இன்று தனது 47வது ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது. இதையொட்டி, இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் வாழ்த்து மற்றும் உற்சாகச் செய்தியை பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில், கட்சி சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட காலகட்டத்தில், தற்போதைய கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ‘மிசா பேட்ச்’ மூலம் இளைஞர் அணி உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், காலத்தின் தேவைக்கு ஏற்ப கொள்கைப் பணிகளையும், மக்களுக்கான சேவைகளையும் மேலும் தீவிரமாக முன்னெடுக்க இளைஞர் அணி தயாராக இருப்பதாகவும், “அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?” என்ற கேள்வியுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.