அஞ்சல் சேவையில் குறைகள் உள்ளதா? செப்.18 வரை கருத்து தெரிவிக்கலாம்!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

அஞ்சல் சேவையில் குறைகள் உள்ளதா? செப்.18 வரை கருத்து தெரிவிக்கலாம்!

அஞ்சல் சேவையில் குறைகள் உள்ளதா? செப்.18 வரை கருத்து தெரிவிக்கலாம்!

தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர்களின் குறைகளைத் தெரிவித்து தீர்வு காணும் முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 11,745 தபால் நிலையங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். அஞ்சல் சேவைகளின் தரத்தை உயர்த்துவது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதற்காக, “அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்”என்ற தலைப்பில் தங்களது கருத்துகளை, ஏ. சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்பாக** அனுப்ப வேண்டும். மேலும், “DAK ADALAT” என்ற தலைப்பில் [pg.tn@indiapost.gov.in](mailto:pg.tn@indiapost.gov.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம்.