அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் அமைக்கும் பணி: மும்பை மாநகராட்சி தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் அமைக்கும் பணி: மும்பை மாநகராட்சி தடை

அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் அமைக்கும் பணி: மும்பை மாநகராட்சி தடை

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பையின் ஜுகுவில் உள்ள கபோல் ஹவுசிங் சொசைட்டி பங்களாவில் வசித்து வருகிறார். சுமார் 7,802 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பங்களாவின் ஒரு பகுதியை வாடகைக்கு விட அவர் முடிவு செய்துள்ளார். அந்தப் பகுதியில் சலூன் மற்றும் ஸ்பா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், உரிய அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, சொசைட்டி நிர்வாகம் மும்பை மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜய் தேவ்கனின் பங்களாவில் சலூன் மற்றும் ஸ்பா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சொத்தை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு மாநகராட்சி தரப்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அஜய் தேவ்கனிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளிக்க அவரது குடும்பத்தினர் நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளனர். இதற்கிடையே, அஜய் தேவ்கன் தரப்பில் கூறுகையில், குறிப்பிட்ட இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முறையாகப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது சொத்தின் ஒரு பகுதியை சலூன் மற்றும் ஸ்பா நடத்துவதற்காக ஒரு நிறுவனத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட அஜய் தேவ்கன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதற்கான மொத்த வாடகைத் தொகை ரூ.10.61 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜய் தேவ்கன் மற்றும் நடிகை கஜோல் பாலிவுட்டில் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட பிரபல நட்சத்திர ஜோடியாக உள்ளனர். கஜோல் தமிழில் வெளியான ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றவர்.