அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Sep 2026 www.thinathulir.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?

அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் அவரது மனைவி ஷாலினி கேமியோ கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவலுக்கு ஷாலினி தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அதே இயக்குநருடன் அஜித் தனது 64-வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது.அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி, ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.இந்த சூழலில், படத்தில் ஷாலினி கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவின. இதுகுறித்து அவரது தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், இனிமேல் திரைப்படங்களில் நடிக்கும் திட்டம் இல்லை என்றும், கேமரா முன் தோன்றுவதைவிட திரைக்குப் பின்னால் இருந்து தனது பங்களிப்பை வழங்கவே விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.