அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர்: கே.என்.நேரு குற்றச்சாட்டு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர்: கே.என்.நேரு குற்றச்சாட்டு

அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர்: கே.என்.நேரு குற்றச்சாட்டு

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனைக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவில் சிறப்பாக செயல்படுபவர்களை குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். அன்பில் மகேஸ் வீட்டில் நடைபெறும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், திமுகவினரை அச்சுறுத்த தவெக அரசு முயற்சிப்பதாகவும் கே.என்.நேரு தெரிவித்தார். மேலும், தவெக அரசின் சோதனைகளை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்வோம் என்றும், சட்டப்படி சோதனையை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நிரபராதி என்பதை நிரூபித்து வெற்றி பெறுவோம் என்றும் கூறினார். அன்பில் மகேஸை சந்திக்கக்கூட காவல்துறையினர் தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் கே.என்.நேரு தெரிவித்தார். முன்னதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அன்பில் மகேஸ் வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் கே.என்.நேரு காத்திருந்தார். சிறிது நேரம் காத்திருந்தபோதும் அவரை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, செல்போன் மூலம் அன்பில் மகேஸிடம் பேசிய கே.என்.நேரு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.