அசாமில் பயங்கர நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அசாமில் பயங்கர நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

அசாமில் பயங்கர நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதைந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கவுகாத்தியில் உள்ள மலைப்பகுதியில் மதஹரியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு அந்தப் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவில் சிக்கிய வீடு முழுவதும் மண்ணுக்குள் புதைந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும், தம்பதியின் மகன் படுகாயமடைந்தார்.தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.