* அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரஜாபதி, எஸ்பிஐயில் தொழில் விரிவாக்கத்துக்காக கடன் பெற்றுள்ளார். * மொத்த நிலுவைத் தொகை ரூ.2.81 கோடி என வங்கி புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. * கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வங்கியின் அனுமதியின்றி விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * வங்கி அதிகாரிகள் தொழிற்சாலைக்குச் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது. * அடமானச் சொத்தை ஏலம் மூலம் வங்கி ரூ.62.9 லட்சத்தை மீட்டுள்ளது. * தொழிலதிபர், உத்தரவாததாரர் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து குஜராத் சிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.