RM புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில் திருமதி.ஜெயராணி அம்மா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

RM புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில் திருமதி.ஜெயராணி அம்மா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

RM புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில் திருமதி.ஜெயராணி அம்மா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

மதுரை ஒத்தக்கடை: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான RM புரோமோட்டர்ஸ் & பில்டர்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரியும் திருமதி ஜெயராணி அவர்களின் பிறந்தநாள் விழா, ஒத்தக்கடையில் உள்ள நிறுவன அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள், திருமதி ஜெயராணி அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, பிறந்தநாள் நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் உயர்நிலை ஊழியர்கள் திம்மணன், பொன்ராஜ், மீனாட்சி மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டு, திருமதி ஜெயராணி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் பேசிய நிறுவனத் தலைவர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள், 75 வயதிலும் சுறுசுறுப்புடன் தொடர்ந்து உழைத்து வரும் திருமதி ஜெயராணி அவர்களின் உழைப்பு அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாக உள்ளது. அவரைப் போன்று நம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளையும், நினைவுப் பரிசையும் வழங்கிய நிறுவனத் தலைவர் மற்றும் சக ஊழியர்கள் அனைவருக்கும் திருமதி ஜெயராணி அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.