5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் செய்த சூரியின் ‘மண்டாடி’
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் செய்த சூரியின் ‘மண்டாடி’

5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் செய்த சூரியின் ‘மண்டாடி’

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், மதிமாறன் இயக்கத்தில் உருவான ‘மண்டாடி’ படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கு இடையே நடைபெறும் படகுப் போட்டியைச் சுற்றி நகர்கிறது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட திரைகள் ‘மண்டாடி’ படத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. இதன் மூலம், சூரி நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக ‘மண்டாடி’ அமைய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.