5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதியின் ’பத்தா’ திரைப்படம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதியின் ’பத்தா’ திரைப்படம்

5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதியின் ’பத்தா’ திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமான சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 சினி1 ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரூ.28 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 1-ம் தேதி வெளியானது. வெளியான முதல் 5 நாட்களில் ‘பத்தா’ திரைப்படம் ரூ.11.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூல் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் சற்று சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.