4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல் ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல் ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல் ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

தமிழகத்தில் மின்சார தேவையை சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்றார். பீக் ஹவர்ஸ் நேரத்தில் மின் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவே வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கொள்முதல் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போதைய பீக் ஹவர்ஸ் நேரத்தில் கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சார தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் வரையிலும் மின் தேவை அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செவிலியர்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுவது தவறான தகவல் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும், செவிலியர்கள் போராட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு என்ன பங்கு உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.