4 நாட்களில் 20 காசுகள் உயர்ந்த முட்டை விலை!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

4 நாட்களில் 20 காசுகள் உயர்ந்த முட்டை விலை!

4 நாட்களில் 20 காசுகள் உயர்ந்த முட்டை விலை!

நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை நேற்று 535 காசுகளாக, அதாவது ரூ.5.35 ஆக இருந்தது. இதையடுத்து நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முட்டையின் கொள்முதல் விலை தற்போது 540 காசுகளாக (ரூ.5.40) அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை மொத்தம் 20 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டைக்கான தேவை அதிகரித்திருப்பதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.