தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கான டாஸ் போடப்பட்டதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, முதலில் பந்துவீச அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.