30 மாத்திரைகள் உட்கொண்ட 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு... சேலத்தில் சோகம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

30 மாத்திரைகள் உட்கொண்ட 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு... சேலத்தில் சோகம்

30 மாத்திரைகள் உட்கொண்ட 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு... சேலத்தில் சோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகிலுள்ள எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு மற்றும் சலவைத் தூள் விற்பனை செய்து வரும் இவரது மனைவி வரலட்சுமி (35). இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர். தேவி ஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.தேவி ஸ்ரீ அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த நாளில் காலை 8.30 மணியளவில் பள்ளிக்குச் செல்லாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய பெற்றோர், அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இதன்பின் பள்ளிக்குச் சென்ற தேவி ஸ்ரீ, மதியம் 12.30 மணியளவில் வயிற்று வலி இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெற்றோர் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். அப்போது, பெற்றோர் திட்டியதால் பள்ளியில் வழங்கப்பட்டிருந்த 10 சத்துமாத்திரைகளை வீட்டிலேயே உட்கொண்டதாகவும், பின்னர் பள்ளியில் மேலும் 20 மாத்திரைகளை சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி தேவி ஸ்ரீ உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.