30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் 500 குடும்பங்கள் – மதுரை ஆட்சியரிடம் மனு!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் 500 குடும்பங்கள் – மதுரை ஆட்சியரிடம் மனு!

30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் 500 குடும்பங்கள் – மதுரை ஆட்சியரிடம் மனு!

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மனுக்கள் பெறப்படும் அதனை ஒட்டிமதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கல்லணை ஊராட்சியை சேர்ந்த காந்தி கிராமம்புது காலணியில் பட்டியல் இன மக்கள் சுமார் 500 குடும்பங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் சாக்கடை, கழிப்பறை வசதி, இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக அலங்காநல்லூர் ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி உதவி இயக்குனர், சந்தித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது தொடர்பாக இன்று தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் ச.கருப்பையா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து சாலை வசதி, கழிப்பறை வசதி, அடிப்படை வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து மனு அளித்தார் ஹரிஷ் - மதுரை மாவட்ட செய்தியாளர்