3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கேப்டன் சிகந்தர் ராசா 81 ரன்கள் விளாசினார். கிரேக் எர்வின் 59 ரன்களும், இன்னசென்ட் கையா 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே சாதகமாக அமையவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி நெருக்கடியை சந்தித்தது. இந்த சூழலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸ் பொறுப்புடன் ஆடி சதம் விளாசினார். அவர் 11 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் சேர்த்தார். அலெக்ஸ் கேரி 34 ரன்களும், கூப்பர் கானொலி 21 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாதன் எலிஸ் நிதானமாக விளையாடி 43 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அவரது முக்கியமான பங்களிப்பால் ஆஸ்திரேலியா கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.