3-நாள் பயணமாக உக்ரைன், போலந்து செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

3-நாள் பயணமாக உக்ரைன், போலந்து செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

3-நாள் பயணமாக உக்ரைன், போலந்து செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளுக்கு 3 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்சங்கர் வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரு நாடுகளிலும் பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பயணத்தின்போது, உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்ட்ரி சிபிஹாவுடனும், போலந்து துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடனும் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்இந்தச் சந்திப்புகளில் இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும். மேலும், பிராந்திய அளவிலான சமீபத்திய நிலவரங்கள் மற்றும் இரு தரப்புக்கும் பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஜெய்சங்கரின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.