2000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க உத்தரவு? – கட்டண உயர்வு இன்றி வருவாய் அதிகரிக்க ஆலோசனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

2000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க உத்தரவு? – கட்டண உயர்வு இன்றி வருவாய் அதிகரிக்க ஆலோசனை

2000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க உத்தரவு? – கட்டண உயர்வு இன்றி வருவாய் அதிகரிக்க ஆலோசனை

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், 2,000 புதிய குளிர்சாதன (ஏசி) பேருந்துகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், புதிய ஏசி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தை எந்த சூழலிலும் உயர்த்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, கட்டண உயர்வின்றி போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் மாற்று வழிகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் ஒரு பகுதியாக, பேருந்துகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் விளம்பரங்கள் அமைத்தல், பயணச்சீட்டுகளின் பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.