நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் கிறைஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (சனிக்கிழமை) அதே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷனுக்குப் பதிலாக சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடரில் முன்னிலையை அதிகரிக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.