இளம்பெண் அதிர்ச்சி முடிவுகேரளாவில் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்காக விண்ணப்பித்த மாணவர் விசா தொடர்ந்து 2 முறை நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்ததாகக் கூறப்படும் 25 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டசம்பவம்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம் அருகே பூவச்சல் பகுதியைச் சேர்ந்த பாபு-சிந்து தம்பதியின் மகள் அஞ்சனா (25). பிசிஷியன் அசிஸ்டென்ட் படிப்பை நிறைவு செய்திருந்த அவர், மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவருடன் விண்ணப்பித்த சிலருக்கு விசா கிடைத்ததாக கூறப்படுகிறது. இது அஞ்சனாவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.இதையடுத்து அவர் மீண்டும் 2-வது முறையாக விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து சென்று உயர்கல்வி படிக்க முடியாத நிலை குறித்து அஞ்சனா தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அஞ்சனா தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அஞ்சனா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.