15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 4.5 கி.மீ. உயரத்திலும், குமரிக்கடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரையிலும் வளிமண்டலச் சுழற்சிகள் காணப்படுகின்றன. மேலும், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசிஆகிய 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.