12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல்

12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல்

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடங்களில் தற்போது பதவி வகிக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனிடையே, மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தலும் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.