118 பவுன் நகைகளை பறிகொடுத்தும் தொடரும் ரீல்ஸ்: மீண்டும் பணத்தை அள்ளி வீசிய பிரபல யூடியூபர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

118 பவுன் நகைகளை பறிகொடுத்தும் தொடரும் ரீல்ஸ்: மீண்டும் பணத்தை அள்ளி வீசிய பிரபல யூடியூபர்

118 பவுன் நகைகளை பறிகொடுத்தும் தொடரும் ரீல்ஸ்: மீண்டும் பணத்தை அள்ளி வீசிய பிரபல யூடியூபர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மீண்டும் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியபடி ரீல்ஸ் வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமார். இவரது மனைவி மதுமிதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி தங்களிடம் உள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை சமூக வலைதள வீடியோக்கள் மூலம் அடிக்கடி காட்சிப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மாதந்தோறும் தங்கம் வாங்குவதாகவும், மற்றவர்களும் தங்கம் வாங்க வேண்டும் என்றும் கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்களை மர்ம நபர்கள் கண்காணித்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் குடும்பத்தினர் துணிக்கடைக்குச் சென்றிருந்த நேரத்தில் அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் கொள்ளை நடந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மதுமிதா தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வருகிறார். கொள்ளை சம்பவத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அவர் 6 புதிய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களில் குழந்தையின் மீதும், படுக்கையிலும் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளைப் பரப்பி, பணத்தில் குளிப்பது போன்ற காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதுடன், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 4.50 லட்சமாக அதிகரித்துள்ளது. 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பிறகும் மீண்டும் பணத்தை வெளிப்படையாகக் காட்டி ரீல்ஸ் வெளியிடுவது குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் நகை மற்றும் பணம் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டதால்தான் கொள்ளை நடந்திருக்கலாம் என்றும், இதற்குப் பிறகும் அதேபோன்ற வீடியோக்களை வெளியிடுவது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொரு தரப்பினர், அதிக பார்வைகளையும் விளம்பரத்தையும் பெறுவதற்கான உத்தியாக இந்த வீடியோக்கள் இருக்கலாம் என விவாதித்து வருகின்றனர். இதற்கிடையே, சமூக வலைதள பதிவுகள் மூலமாகவே கொள்ளையர்கள் வீட்டை கண்காணித்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுமிதா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோக்களும் விசாரணையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.