112 கோடியே 39 லட்சம் தேர்தல் செலவு - அதிமுக
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

112 கோடியே 39 லட்சம் தேர்தல் செலவு - அதிமுக

112 கோடியே 39 லட்சம் தேர்தல் செலவு - அதிமுக

2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான தனது தேர்தல் செலவு கணக்கை அதிமுக தாக்கல் செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சியின் தேர்தல் பணிகளுக்காக ரூ.109,61,81,982 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.112 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 992 என கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதிமுகவின் மொத்த நிதி கையிருப்பு ரூ.295 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரத்து 517 ஆக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் செலவில் பெரும்பகுதி விளம்பரம் மற்றும் ஊடகப் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாளிதழ்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட விளம்பரப் பணிகளுக்கு மட்டும் சுமார் ரூ.103.98 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காக ரூ.1.28 கோடி செலவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக ரூ.17.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் கட்சி கணக்கு தாக்கல் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்துக்கான செலவுகளும் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது பிரசாரப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சமும், வாகனங்களுக்கான டீசல் செலவாக ரூ.4.14 லட்சமும் செலவிடப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அறிக்கை, ஃபார்ம்-ஏ, ஃபார்ம்-பி உள்ளிட்ட படிவங்களைத் தயாரித்து அச்சிடுவதற்காக ரூ.4.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளுக்காக ரூ.109 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ள நிலையில், அனைத்து செலவுகளும் முடிந்த பிறகும் கட்சியிடம் சுமார் ரூ.296 கோடி நிதி கையிருப்பில் இருப்பதாக தேர்தல் செலவு அறிக்கை தெரிவிக்கிறது.