11,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை... வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

11,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை... வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

11,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை... வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மந்தனா இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டிக்கு முன்பு 11,000 ரன்களை எட்டுவதற்கு மந்தனாவுக்கு மேலும் 13 ரன்கள் தேவைப்பட்டன. சுகந்திகா குமாரி வீசிய பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம், 10 பந்துகளிலேயே அவர் அந்த மைல்கல்லை எட்டினார். மந்தனா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 9 ஆட்டங்களில் 788 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 120 ஆட்டங்களில் 5,411 ரன்களும், 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் 178 ஆட்டங்களில் 4,788 ரன்களும் சேர்த்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை மட்டுமின்றி, உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 18 சதங்கள் அடித்துள்ள மந்தனா, அதிக சதங்கள் விளாசிய வீராங்கனை என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.