11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகப் பகுதிகள் வழியாக தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.