10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, நாகப்பட்டினம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.